Jan 7, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்குச் செல்ல வங்காளதேசம் மறுப்பு
விளையாட்டு

இந்தியாவுக்குச் செல்ல வங்காளதேசம் மறுப்பு

Share:

டக்கா, ஜனவரி.06-

இந்தியாவுக்குச் செல்ல வங்காளதேச கிரிக்கெட் அணி மறுத்துள்ளது. தங்களது 'டி-20' உலக கோப்பை லீக் போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படி வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. வங்கதேச அணி, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 7, கோல்கட்டா), இத்தாலி (பிப். 9, கோல்கட்டா), இங்கிலாந்து (பிப். 14, கோல்கட்டா), நேபாளம் (பிப். 17, மும்பை) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து வங்காலதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'பாதுகாப்பு கருதி, 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்க எங்கள் அணியினரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்,' எனத் தெரிவித்தது.

இந்தியாவில் நடக்கும் பிரிமியர் தொடரின் போட்டிகளை வங்காளதேசத்தில் நேரடி ஒளிரப்பு செய்ய வேண்டாமென வங்காளதேச தகவல், தொழில்நுட்ப அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரிமியர் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.


Related News