ஷென்சென், செப்டம்பர்.19-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களான கோ ஸீ ஃவெய்யும் நூர் இஸ்ஸூடின் ரும்சானியும் சீனா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் காலிறுதியில் தோல்வி கண்டனர். அவர்கள் இந்தோனேசியாவின் ஃபாஜார் அல்ஃபியான்- ஷோஹிபுல் ஃபிக்ரியிடம் நேரடி செட்களில் தோல்வியுற்றனர்.
கடந்த மே மாதம் உலகின் முதல் நிலை ஆடவர் இரட்டையர்களாகத் திகழ்ந்த ஸீ ஃவெய்யும் நூர் இஸ்ஸூடினும் அதன் பிறகு பின்னடைவைச் சந்தித்தனர். மலேசிய மாஸ்டர்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டிகளில் அவர்களது போராட்டம் காலிறுதியிலேயே முடிவுற்றது.








