கோலாலம்பூர், ஜனவரி.05-
மலேசிய பொது பூப்பந்து போட்டியில் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்ற நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனை பெர்லி டான் இலக்கு கொண்டுள்ளார். கடந்த பருவத்தில் தாய்லாந்து, ஆர்டிக் பொது பூப்பந்து போட்டிகளிலும் ஜப்பான் மாஸ்டர்ஸ் போட்டியிலும் அவர் வெற்றி பெற்றார். அது தமக்கு இந்த புதிய நம்பிக்கையை அளித்திருப்பதாக பெர்லி கூறினார்.
அவ்வகையில் அதற்குத் தாம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முதல் சுற்று ஆட்டத்தில் பெர்லி - எம் தீனா ஜோடி இந்திய வீராங்கனைகளான ருதுபர்ணா பாண்டா - சுவேதா பாண்டாவை எதிர்கொள்கிறது. இதற்கு முன் அர்களுடன் மோதிய அனுபவம் இல்லை என்றாலும் அவ்வாட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என பெர்லி கூறினார்.
எனவே இம்முறை கூடுதல் கவனம் கொடுத்து விளையாடவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மலேசிய பொது பூப்பந்து போட்டி நாளை தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.








