கோலாலம்பூர், அக்டோபர்.19-
வரவிருக்கும் 33வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் மலேசிய ஆடவர் தேசியக் கால்பந்து அணிக்குச் சவால் நிறைந்த ஆரம்பம் காத்திருக்கிறது. குழு B-யில், பலமுறை சாம்பியனான வியட்நாம், லாவோஸ் ஆகிய அணிகளுடன் மலேசியா மோத வேண்டியுள்ளது. இந்த டிசம்பர் 3 முதல் 18 வரை தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில், மகளிர் கால்பந்துப் போட்டியிலும் மலேசியா மீண்டும் வியட்நாம் அணியுடன் மியான்மர், பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகளை எதிர்த்துப் போட்டியிடுகிறது. மேலும், Futsal பிரிவில் மலேசிய ஆடவர் அணி தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் ஆகிய அணிகளுடன் மோதுவதுடன், மகளிர் Futsal அணி தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகளுடன் குழு A-யில் விளையாடவுள்ளது.