ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.