Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மியாமி ஓபன் டென்னிஸ், ரோகன் போபண்ணா இணை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ், ரோகன் போபண்ணா இணை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Share:

மியாமி, மார்ச் 25.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை இத்தாலியில் ஆண்ட்ரியா வவசோரி - சிமோன் பொலேல்லி இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த போபண்ணா இணை அடுத்த இரு செட்களை 7-6(7-4), 10-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி இத்தாலியில் ஆண்ட்ரியா வவசோரி - சிமோன் பொலேல்லி இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறியது.

Related News