கோலாலம்பூர், அக்டோபர்.22-
தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி உலகத் தர வரிசையில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டியில் தொடக்கக் கட்டத்திலேயே வெளியேறினாலும், அவர் இரு இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 26 வயதான சிவசங்கரி இதுவரை பதிவு செய்துள்ள மிக உயரிய நிலை அதுவாகும்.
இதனிடையே நாட்டின் மற்றொரு வீராங்கனையான ரேச்சல் ஆர்னால்ட், ஓரிடம் முன்னேறி 19 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் தேசிய வீரர் ங் இயேன் யோவ், 12 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.








