Jan 11, 2026
Thisaigal NewsYouTube
பிஎஸ்ஜி வெற்றி
விளையாட்டு

பிஎஸ்ஜி வெற்றி

Share:

குவைத், ஜனவரி.10-

பிரான்ஸ் சூப்பர் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி அணி பெனால்டி வாயிலாக மார்சே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. குவைத்தில் பிரான்ஸ் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதியாட்டம் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் அணியும் மார்சே அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 13வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் அவுஸ்மேன் டெம்பெலே தனது அணிக்காக முதல் கோல் போட்டு அதிரடி காட்டினார். போட்டியின் 2வது பாதியில் மார்சே அணி வீரர் மேசன் கிரின்வுட் 76வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தனது அணியின் முதல் கோலை போட்டார்.

சிறிது நேரத்தில் அதே அணியின் வில்லியன் பேச்சோ 87வது நிமிடத்தில் அடுத்த கோல் போட்டு முன்னிலைப்படுத்தினார். போட்டியின் கடைசி கட்டத்தில் 95 ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் கோன்சலோ ராமோஸ் அட்டகாசமாக அணியின் 2வது கோல் போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால் பெனால்டி மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் பிஎஸ்ஜி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Related News