Oct 19, 2025
Thisaigal NewsYouTube
46 ஆவது தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி - பேரா இந்திய பூப்பந்து மன்றம்
விளையாட்டு

46 ஆவது தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி - பேரா இந்திய பூப்பந்து மன்றம்

Share:

ஈப்போ, மே.31-

பேரா இந்திய பூப்பந்து மன்றம் 46 ஆவது ஆண்டாக தேசிய நிலையிலான பூப்பந்து போட்டியை நேற்று நடத்துகிறது. அப்போட்டி ஜூன் முதல் தேதி வரை நடைபெறும். நாடு முழுவதும் சுமார் 730 பேர் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வேளை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 45 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை வழங்கி உள்ளது.

நாட்டின் விளையாட்டுத் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் பல முயற்சிகளில் இத்தகைய விளையாட்டு மன்றங்களுக்கு நிதியுதவி வழங்குவதும் அடங்கும் என போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லோகநாதன் நாகப்பன் தெரிவித்தார். அதோடு, நாட்டின் சிறந்த பூப்பந்து விளையாட்டாளர்களை உருவாக்க இப்போட்டி உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News