ஷா ஆலாம், ஆகஸ்ட்.19-
2025 சுல்தான் ஆஃப் சிலாங்கூர் கிண்ணக் (TSSC) கால்பந்து போட்டியைக் காண சுமார் 20,000 உள்நாட்டு கால்பந்து ரசிகர்கள் கோலாலம்பூர், மெர்டேகாஅரங்கில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
75 விழுக்காட்டு டிக்கெட்டுகள் இதுவரை விற்றுத் தீர்ந்துள்ளன. அவ்வகையில் அந்த பிரசித்தி பெற்ற கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெறும் என்று TSSC தலைவர் டான் ஸ்ரீ அப்துல் கரீம் முனிசார் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்னும் 400 டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. தாமதமாக வருபவர்களுக்கு நிச்சயமாக அவை கிடைக்காது. எனவே, சீக்கிரம் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போதைக்கு, TSSC 2025 டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகளை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்கிறோம். மெர்டேகா அரங்கில் சுமார் 20,000 பேர் உட்காரலாம்.
மெர்டெக்கா அரங்கம் என்பது ஒரு தேசியப் பாரம்பரியமாகும். இது நிறைய வரலாற்றை உருவாக்கியுள்ளது. சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின்இட்ரிஸ் ஷாவின் ஒப்புதலுடன் TSSC போட்டி அங்கு நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும் என அவர் குறிப்பிட்டார்.