Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பெர்லி டான்- எம்.தீனாவுக்கு இரண்டாவது இடம்
விளையாட்டு

பெர்லி டான்- எம்.தீனாவுக்கு இரண்டாவது இடம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.08-

இந்தோனேசிய பொதுப் பூப்பந்து போட்டி 2025இல் இறுதிச் சுற்றில், மலேசியாவின் முன்னணி இரட்டையர் வீராங்கனைகளான பெர்லி டான்- எம்.தீனா ஜோடி, உலகின் முதல் நிலை ஜோடியான லியூ ஷெங் ஷூ- டான் நிங் ஜோடியிடம் தோல்வியடைந்தனர். இருப்பினும், Super 1000 தகுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் செட்டை 25க்கு 23 என வென்றாலும், இரண்டாவது செட்டில் 21க்கு 12 எனும் புள்ளிகளில், தோல்வி அடைந்தனர். மூன்றாவது செட்டில் கடுமையான போட்டிக்குப் பிறகு, 19க்கு 21 என்ற புள்ளிக் கணக்கில் மீண்டும் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து 50 ஆயிரத்து 750 டாலரை பரிசாகப் பெற்றனர்.

Related News