பாங்கோக், டிசம்பர்.11-
தாய்லாந்தில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில், நாட்டின் ஆடவர் குழு கராத்தே பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது. மலேசியா சார்பில் முகமட் அதிகாரி அஸ்மாடி, முகமட் அரிஃப் ஹிஷாமடி, முகமட் ஹஸ்னில் ஹென்ரி ஆகியோர் களமிறங்கினர். அவர்கள் 23.3 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
அக்குழு உருவாக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகிறது. எனவே இந்த அடைவு நிலையானது மிகப் பெரிய உந்துதலாக இருப்பதாக தேசிய அணியின் பயிற்றுனர் தெரிவித்துள்ளார். அப்போட்டியில் உபசரணை நாடான தாய்லாந்து தங்கத்தை வாகை சூடியது.
இதுவரையில் மலேசியா, 2 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.








