4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்குகிறது. கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று தற்போது ஒரு மதமாக மாற்றியதற்கு முழு காரணமே இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் என்று சொல்லலாம்... எப்படியாவது சச்சினுக்கு உலகக் கோப்பையை வாங்கிகொடுத்தரனும் என ஒவ்வொரு இந்தியனும் ஏங்கும் அளவிற்கு வசீகரத்தை உள்ளடக்கியுள்ளது இந்த ஒருநாள் உலகக் கோப்பை..
கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்து அதை உருவாக்கியதாக சொல்லப்படும் இங்கிலாந்து முதல் முறையாக 1975ம் ஆண்டு 60 ஓவர் போட்டியாக உலகக் கோப்பை தொடரை அறிமுகம் செய்தது. டெஸ்ட் போட்டியின் போது மழை பெய்ததால் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என 60 ஓவராக நடைபெற்ற ஒருநாள் போட்டி உலகக் கோப்பை நடத்தும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திளுத்தது.

முதல் போட்டியே இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்ரீனிவாச வெங்கடராகவன் என்ற தமிழர் என்பது நமக்கெல்லாம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது..
1975, 79 என முதல் இரண்டு தொடர்களில் அசால்டாக அனைத்து அணிகளையும் வீழ்த்தி உலகக் கோப்பையை ஊதி தள்ளி தனது ஊருக்கு மூட்டைகட்டி எடுத்துச்சென்றது வெஸ்ட் இண்டீஸ். அப்போது விவியன் ரிச்சர்ட்சன் கதாநாயகனாக வலம் வந்தார்.