13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி,வங்காளதேசத்தை சந்திக்கிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி
இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில்
தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும்
ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.