ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர்.
வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.
இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா
சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாம தப்படுத்தியுள்ளது.