கோலாலம்பூர், நவம்பர்.07-
பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் கால்களையும், கைகளையும் பயன்படுத்தி நடைபெறும் குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு 15 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பயன்படுத்தப்படுவதற்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தடை விதித்தது.
இத்தகைய குத்துச் சண்டைகளை ஏற்பாடு செய்கின்ற அனைத்து ஏற்பாட்டாளர்களும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அதன் அமைச்சர் ஹான்னா இயோ கேட்டுக் கொண்டார்.
இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
MMA, Muay Thai, Kickboxing மற்றும் மல்யுத்தம் போன்ற குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைப் பயன்படுத்துவதற்கு 1997 ஆம் ஆண்டு விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம், மாநில விளையாட்டு சங்கம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் ஹான்னா இயோ தெரிவித்தார்.








