இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார்.
மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.