புதுடில்லி, செப்டம்பர்.28-
மலேசியாவின் பாரா தடகள வீரர் டத்தோ அப்துல் லாதிஃப் ரொம்லி, இந்தியா புதுடில்லியில் நடைபெற்ற பாரா உலகத் தடகளப் போட்டியில் வரலாறு படைத்துள்ளார்! அவர் ஆண்களுக்கான T20 நீளம் தாண்டுதல் பிரிவில் 7.67 மீட்டர் தூரம் தாண்டித் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தச் சாதனை மூலம், 2018 பாரா ஆசியப் போட்டிகளில் அவர் வைத்திருந்த 7.64 மீட்டர் என்ற தன்னுடைய உலகச் சாதனையையே முறியடித்து புதிய சாதனை செய்தார். இந்த வெற்றியைக் கடும் பயிற்சியையும் குடும்ப நேரத்தையும் சமநிலைப்படுத்தியதன் பலனாகக் கருதுவதாக அவர் பெருமையுடன் கூறினார். அப்துல் லாதிஃப்பின் இந்த மாபெரும் சாதனை, மலேசியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது.