கோலாலம்பூர், ஜனவரி.08-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவில் 7 வெளிநாட்டுக்கார ஆட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடியைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெருவாரியாகப் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஆட்டக்காரர்களின் மூதாதையர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கண்டறிந்ததைத் தொடர்ந்து அனைத்துலக கால்பந்து சம்மேளனத்திலிருந்து நாட்டின் பிரதான கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் இடை நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க அதன் பொறுப்பாளர்கள் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








