கோலாலம்பூர், நவம்பர்.09-
கொரியன் மாஸ்டர்ஸ் பொதுப் பூப்பந்து போட்டியில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான ஜிம்மி வோங்- லாய் பெய் ஜிங், இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியதால், இந்தப் பருவத்தில் ஒரு கோப்பையாவது வெல்லும் அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. உலகத் தர வரிசையில் 37வது இடத்தில் இருக்கும் இந்த இணை, 58 நிமிடங்கள் நடந்த இந்தச் சவாலான மோதலில், கொரிய ஜோடியான Kim Jae Hyeon-Jeong Na Eun ஆகியோரிடம் 22க்கு 24, 18 க்கு 21 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வீழ்ந்தது.








