ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார்.
புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் வார்னர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.