வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சவுமியா - அனுமுள் களமிறங்கினர்.
அனுமுள் 2, சாண்டோ 6, லிட்டன் தாஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து ரஹீம் மற்றும் சவுமியா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். ரஹிம் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.