கோலாலம்பூர், அக்டோபர்.28-
தேசிய பூப்பந்தாட்ட வீரர்களைக் குறி வைத்து சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள அவதூறு மற்றும் மிரட்டல் கருத்துக்களுக்கு மலேசிய பூப்பந்து சங்கமான பிஎஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய வீரர்களை இணையத்தில் பகடி வதை செய்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ள அச்சங்கம், விளையாட்டாளர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், தேசிய வீரர்களை மரியாதையுடனும், நேர்மறையான கருத்துகளுடன் நடத்துமாறு பொதுமக்களை பிஎஎம் வலியுறுத்தியுள்ளது.








