கோத்தா திங்கி, ஜனவரி.13-
வயது குறைந்த பையனிடம் பாலியல் சேட்டை புரிந்ததாக கூறப்படும் கால்பந்து பயிற்றுநர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளர்.
தொழில் ரீதியாக சான்றிதழ் பெற்ற அந்த பயிற்றுநர், கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஜோகூர், கோத்தா திங்கி, தஞ்சோங் செடிலி, கம்போங் கெம்புட் என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பையன், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த பயிற்றுநர், பாதிக்கப்பட்ட பையனின் அண்டை வீட்டுக்காரர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.








