Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இந்தியா-ஆப்கானிஸ்தான் 'டிரா',  உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்
விளையாட்டு

இந்தியா-ஆப்கானிஸ்தான் 'டிரா', உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்

Share:

அபஹா, மார்ச் 23.

இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் நடந்த லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 117 வது இடத்திலுள்ள இந்திய அணி 158 வது இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இதில் இந்தியா எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வி, 'டிரா' செய்து, 4 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (9) உள்ளது.

கவுகாத்தியில் மார்ச் 26ல் நடக்கவுள்ள அடுத்த போட்டியில் இந்திய அணி, மீண்டும் ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது.

Related News