50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, நாக்அவுட்டில் சொதப்பும் நிகழ்வு கடந்த காலங்களில் நடைபெற்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019-ல்
நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது. தற்போது அந்த தடையை தகர்த்துள்ளது.
இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.