10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.