Nov 3, 2025
Thisaigal NewsYouTube
இபிஎல்லில் ஆர்செனல் தொடர்ந்து முதலிடம்
விளையாட்டு

இபிஎல்லில் ஆர்செனல் தொடர்ந்து முதலிடம்

Share:

லண்டன், நவம்பர்,02-

இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் ஆர்செனல், பெர்ன்லியை 2-0 என்ற கோல்களில் வீழ்த்தியது. அதன் வழி ஆர்செனல் இபிஎல் புள்ளிப் பட்டியலில் தனது முதலிடத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

பெர்ன்லியுடனான ஆட்டத்தை ஆர்செனல் மிகச் சிறப்பாகத் தொடக்கியது. அதன் இரு கோல்களுமே ஆட்டத்தின் முற்பாதியில் போடப்பட்டன. அவை 14 ஆவது நிமிடத்திலும் 35 ஆவது நிமிடத்திலும் புகுத்தப்பட்டன.

இதுவரை பத்து ஆட்டங்களை முடித்துள்ள ஆர்செனல், 25 மொத்தப் புள்ளிகளைத் திரட்டி தொடர்ந்து முன்னணியில் உள்ளது. போர்ன்மெர்த், லிவர்பூல் ஆகியவை இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன.

Related News