இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர்.