ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4-ந்தேதி) தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.