இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்னில் சுருண்டது. கே.எல். ராகுல் மட்டும் தாக்குப்பிடித்து சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்தது. இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.