Dec 1, 2025
Thisaigal NewsYouTube
நீச்சல்: பெல்ப்ஸின் சாதனையே முறியடிப்பு.. உலக சாதனை படைத்த 22 வயது வீரர்!
விளையாட்டு

நீச்சல்: பெல்ப்ஸின் சாதனையே முறியடிப்பு.. உலக சாதனை படைத்த 22 வயது வீரர்!

Share:

ஃபுகுவோகா: உலக நீச்சல் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் 22 வயதேயான இளம் வீரர் லியோன் மர்சந்த், ஆஸ்திரேலியா ஜாம்பவானான பெல்ஸின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் முறியடிக்கப்படாமல் இருந்த பெல்ஸின் ஒரே சாதனை இதுவாகும்.

ஜப்பானில் ஃபுகுவோகாவில் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர்களுக்கான தனிநபர் 400 மீட்டர் மெட்லே வகை நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டின் இளம் வீரர் லியோன் மர்சந்த், 400 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் 2.50 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றதோடு, புதிய உலக சாதனையையும் லியோன் மர்சந்த் படைத்துள்ளார். முன்னதாக 2008ஆம் ஆண்டு சீனாவின்ம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்விம்மிங் ஜாம்பவான் பெல்ப்ஸ், 400மீ தனிநபர் மெட்லே வகை நீச்சல் போட்டியில், பந்தய இலக்கை 4 நிமிடங்கள் 3.84 வினாடிகளில் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை லியோன் மர்சந்த் முறியடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெல்ப்ஸின் படைத்த சாதனைகளில் இது மட்டுமே முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த சாதனையையும் தற்போது பிரான்ஸ் வீரர் லியோன் முறியடித்துள்ளார். அடுத்த பாரீஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், எனது சிறந்த செயல்பாடுகள் இனி தான் வரும் என்று கூறியுள்ளார்.

Related News