கோலாலம்பூர், டிசம்பர்.27-
நாட்டின் ஆடவர் பிரிவு இரட்டையர்களான கோ சீ ஃபெய் - நூர் இஸுடின் முஹமட் ரும்சானி ஆகியோர் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலேசிய பொது பூப்பந்து போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். அவர்கள் தேசிய அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தலைமை பயிற்றுனர் ஹெரி ஐமான் பியெர்ங்காடி கூறினார்.
அவ்விருவரும் வாரத்திற்கு இரு பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அது அவர்களுக்கு உந்துதலாகவும் தங்கள் யுக்திகளை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும். அதே சமயம் தொழில்முறை விளையாட்டாளர்களும் தேசியா ஆட்டக்காரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொள்வது அவர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டித்தன்மையை ஏற்படுத்தும் என ஹெரி தெரிவித்தார்.








