இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை
அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை வலது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், அடுத்து இரண்டு அறிமுக வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவை முன்னதாக களம்
இறக்கினார் ரோகித் சர்மா.