பெய்ஜிங், நவம்பர்.12-
ஷங்ஹாயில் நடைபெற்று வரும் சீன பொது ஸ்குவாஷ் போட்டியில் மலேசியா இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நாட்டின் ஒற்றையர் பிரிவு வீராங்கனைகளான ரேச்சல் அர்னால்ட், ஹஃபிபா அஸ்மான், ஐரா அஸ்மான் ஆகியோர் தத்தம் எதிராளிகளை வீழ்த்தி அவ்வாய்ப்பைப் பெற்றனர்.
ரேச்சல் அடுத்த சுற்றில் பெல்ஜிய வீராங்கனையை எதிர்கொள்கிறார். ஐரா அஸ்மான் எகிப்து போட்டியாளரைச் சந்திக்கிறார். ஹஃபிபா அஸ்மான் முதல் சுற்றில் அயர்லாந்து வீராங்கனையைத் தோற்கடித்தார்.








