இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.