Oct 18, 2025
Thisaigal NewsYouTube
2026 சுக்மாவில் சிலம்பம் உட்பட மூன்று விளையாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன
விளையாட்டு

2026 சுக்மாவில் சிலம்பம் உட்பட மூன்று விளையாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-

சிலாங்கூரில் நடைபெறும் 2026 சுக்மா போட்டியில் சிலம்பம் உட்பட மூன்று விளையாட்டுகள் அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இரண்டு விளையாட்டுகள் பெதான்க் எனப்படும் பந்தெறி ஆட்டமும் முவாய் தாய்யும் ஆகும். அம்மூன்று விளையாட்டுகளையும் இணைப்பது குறித்து சுக்மா செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தேசிய விளையாட்டு மன்றமான எம்எஸ்என் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அதன் மூலம் சிலாங்கூர் சுக்மாவில் 30 கட்டாய விளையாட்டுகளும் 7 தேர்வு விளையாட்டுகளும் போட்டியிடப்படுகின்றன. கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கு இனி எந்த பரிந்துரைகளும் முறையீடுகளும் ஏற்றுக் கொள்ளப்படாது என அது குறிப்பிட்டது.

2026 சுக்மா போட்டி சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களில் ஆகஸ்ட் 15 தொடங்கி ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

Related News