ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.09-
எதிர்வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகும் வகையில், கடந்த வார இறுதியில் யுஎஸ்எம் பினாங்கில் முன்னோட்ட கபடிப் போட்டி 2025 நடைபெற்றது.

இதில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தேசிய கபடி அணிகள் பங்கேற்றன.

இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கும், நமது விளையாட்டு பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இப்போட்டிக்காக மலேசிய மனித வள அமைச்சு 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பில் அவரது பிரதிநிதி டிக்காம் லூர்ட்ஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.