கோலாலம்பூர், அக்டோபர்.17-
ஆவண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம்மின் பொதுச் செயலாளர் நோர் அஸ்மான் ரஹ்மான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஃஎப்ஏஎம் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம் உறுதிப்படுத்தினார்.
ஃபிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனத்திடம் ஃஎப்ஏஎம் சமர்ப்பித்த ஆவணங்களில் மோசடி நடந்துள்ளதாக நோர் அஸ்மான் ரஹ்மானுக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நோர் அஸ்மான் ரஹ்மான் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏழு பாரம்பரிய வீரர்களின் தாத்தா பாட்டி மலேசியாவில் பிறந்ததாகக் கூறும் ஃஎப்ஏஎம் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குழு குற்றஞ்சாட்டியது.
அந்த உலகக் கால்பந்து அமைப்பின் விசாரணையில், அசல் பதிவுகளில் அந்த 7 வீரர்களும் ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரேசில், நெதர்லாந்தில் பிறந்ததாக அம்பலமாகியுள்ளது.