இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது.
இதனால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என முக்கியமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.