கிசா, செப்டம்பர்.18-
தேசிய ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி 2025 எகிப்து பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் தோல்வி கண்டார். உபசரணை நாட்டு வீராங்கனை அமினா ஒர்ஃபிடம் அவர் வீழ்ந்தார். அதனை அடுத்து அரையிறுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் சிவசங்கரியின் கனவு சிதைந்தது.
அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டி தொடங்கி, அவ்விருவரும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இம்முறை சிவசங்கரிக்கு ஏற்பட்டது ஆறாவது தோல்வியாகும். உலகத் தர வரிசையில் சிவசங்கரி ஏழாவது இடத்தில் இருக்கிறார். அமினா நான்காம் நிலையில் உள்ளார்.








