சாங்சோவ், ஜூலை.23-
நாட்டின் ஆடவர் இரட்டையர்களான கோ ஸி ஃபெய்-நூர் இஸுடின் ரும்சானி சீன பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் தோல்வி கண்டனர். உலகத் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அவ்விருவரும் முதல் சுற்றில் தென் கொரிய ஜோடியிடம் மூன்று செட்களில் வீழ்ந்தனர்.
முதல் சுற்றில் ஸி ஃபெய்-நூர் இஸுடின் வெற்றி பெற்றனர். எனினும் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடிய தென் கொரிய வீரர்கள் அடுத்த இரு செட்களில் வென்றனர்.
இவ்வேளையில் நாட்டின் மற்றோர் இணையான ஏரொன் சியா-சோ வுய் யிக், டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அவ்வாட்டத்தை அவர்கள் 41 நிமிடங்களில் முடித்தனர்.