ஹங்ஸொவ், செப்டம்பர்.14-
சீனாவின் ஹங்ஸொவ்வில் நடைபெற்ற 2025 மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில், மலேசிய மகளிர் ஹாக்கி அணியான ஸ்பீடி டைக்கரஸ் சிங்கப்பூரை 8க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், மலேசிய அணி தொடர்ந்து ஆறாவது முறையாக ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி, நமது அணியின் அசாத்திய திறமையையும், விடாமுயற்சியையும் காட்டுகிறது.








