இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.
இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர்.