கோலாலம்பூர், டிசம்பர்.03-
இளையோருக்கான ஹாக்கி போட்டியில் நாட்டின் ஆடவர் அணி இங்கிலாந்திடம் 3-1 என்ற கோல்களில் தோல்வி கண்டது. இந்தியா, தமிழகத்தில் அப்போட்டி நடைபெற்று வருகிறது.
குழு நிலையிலான அவ்வாட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலைப் புகுத்தியது. அடுத்து 36 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப் போட்டது. அதற்கு ஈடு கொடுத்து விளையாடிய மலேசிய அணி 47 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது.
பிற்பாதியில் ஆட்டம் முடிவடையும் தருவாயில் இங்கிலாந்து மூன்றாவது கோலைப் போட்டு வெற்றியாளரானது. அம்முடிவின் வாயிலாக தேசிய அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது.








