கோலாலம்பூர், ஜூலை.13-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூர் கால்பந்து சங்கம் கேஎல்ஃஎப்ஏவிற்கு பத்து லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கிட்டை அறிவித்துள்ளார். அக்கால்பந்து அணியின் மறு மேம்பாட்டிற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையாக அது அமைகிறது. மக்கள் அதிகம் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு நீடித்த ஊக்குவிப்பு கொடுப்பதையும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதையும் அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.
கோலாலம்பூர், பங்சாரில் நடைபெற்ற கேஎல்ஃஎப்ஏவின் 50 ஆம் ஆண்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார். அந்நிகழ்வில் தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சீலும் கேஎல்ஃஎப்ஏவின் தலைவர் சையிட் யாஸிட் சையிட் ஒமாரும் பங்கேற்றனர்.