Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி
விளையாட்டு

மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி

Share:

கோலாலம்பூர், மே.29-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து ஜாம்பவானான மான்செஸ்டர் யுனைடெட், புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ் அணியிடம் 0த்திற்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, 2025 தெ மேபேங்க் செல்லஞ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ருபேன் அமோரிம் தலைமையிலான அணிக்கு, 72 ஆயிரத்து 550 ஆதரவாளர்கள் முன்னிலையில் ஏற்பட்ட இந்தத் தோல்வி, ஹாங் காங்கில் நடக்கவிருக்கும் அவர்களின் அடுத்த பருவத்திற்கு முன் ஒரு கசப்பான அனுபவமாக அமைந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ் வீரர் Mg Mg Lwin அடித்த கோல் ஆட்டத்தின் ஒரே கோலாகும். இந்தப் படுதோல்விக்குப் பிறகு மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் காற்பந்து இரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகினர்.

Related News