பிரேசிலியா, செப்டம்பர்.08-
பிரேசிலில் நடைபெற்ற 17 ஆவது உலக வுஷூ வெற்றியாளர் தொடரில் மலேசியா மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றது. டுலியன் பிரிவில் நாட்டின் மூன்று வீராங்கனைகள் தங்கம் பெற்றனர். வெள்ளிப் பதக்கம் ஹாங் காங்கிற்குக் கிடைத்தது.
ஆடவர் பிரிவில், மூவர் அடங்கிய தேசிய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மாகாவ் முதலிடத்தை வென்றது. ஹாங் காங் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஒட்டு மொத்தத்தில் மலேசியா அப்போட்டியில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தன் வசம் ஆக்கியது.