Oct 16, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், கலாச்சாரம் மட்டுமல்ல: விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் - அன்வார் வலியுறுத்து!
விளையாட்டு

மலேசியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், கலாச்சாரம் மட்டுமல்ல: விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் - அன்வார் வலியுறுத்து!

Share:

ஈப்போ, அக்டோபர்.11-

மலேசியா விளையாட்டுத் துறையில் சாதிக்கும் நாடாகவும், அதே வேளையில், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியுடனும் முன்னேற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அறிவுத்திறனை வைத்து மட்டுமே அளவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ள அன்வார், அதில் விளையாட்டுத் துறையும் முக்கியப் பங்காக இருக்க வேண்டும் என்று மெருவில் இன்று நடைபெற்ற தேசிய விளையாட்டு தின துவக்க விழாவில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், மலேசிய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக 580 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அது ரோட் டூ கோல்ட் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அதே வேளையில், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சீ கேம்ஸ் மற்றும் ஆசியான் பாரா கேம்ஸ் போட்டிகளுக்கான தேசிய அளவிலான தயாரிப்புகளுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related News