உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:-
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மாற்றமின்றி தொடர்ந்து 7 ஆட்டங்களில் அதே வீரர்களை களம் இறக்கியது ஒரு வகையில் சாதனையாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 6 ஆட்டங்களில் ஒரே மாதிரியான லெவன் அணியை விளையாட வைத்து இருந்தது.
இறுதி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 29 ரன் எடுத்த போது, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் திரட்டிய கேப்டனான நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனின்
(2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை தகர்த்தார். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 11 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 597 ரன்கள் சேர்த்துள்ளார்.